சென்னை அடுத்த தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் வாங்கி, திருடித் தலைமறைவான நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கணேசன் அர்ச்சகராக வேலை செய்து வருகிறார்.
இதனிடையே, கோயிலுக்குச் சுவாமி கும்பிட வந்த நபர், தான் பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வருவதாகக் கூறி, மோதிரத்தை சரிசெய்து தருவதாக வாங்கி, தப்பியோடியுள்ளார்.
இதுதொடர்பாகப் போலீசார் விசாரணை மேற்கொண்டு, வேறொரு திருட்டு சம்பவத்தில் கைதாகி திண்டிவனம் கிளை சிறையில் இருக்கும் முருகனை, தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
















