தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் முறையாகப் பராமரிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கும்பகோணம் டவுன் ஹால் ரோடு பகுதியில் அமைந்துள்ள காந்தி பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாகப் பூங்கா முழுவதும் மழை நீருடன் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் பூங்காவைத் தற்காலிகமாக மூடி உள்ளது.
இந்நிலையில், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தனியார் பராமரிப்பில் இருந்தவரை பூங்கா முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்திய பிறகு பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
















