அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல் கரீபியன் கடல் பகுதிக்கு அனுப்பப்படவுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தப்படும் விவகாரத்தில் கொலம்பியா மீது டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனக் கூறியிருந்த டிரம்ப், அவருக்குப் பொருளாதார தடையும் விதித்தார்.
கரீபியன் கடலில் போதைப் பொருள் கடத்தியதாக 10 படகுகளையும் அமெரிக்கா தாக்கி அழித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் கரீபியன் கடலுக்கு ஜெரால்ட் ஆர்.போல்ட் எனும் சக்தி வாய்ந்த விமானம் தாங்கிக் கப்பலை அனுப்ப அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை கடலில் படகுகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்க படையினர், விமானம் தாங்கிக் கப்பலை பயன்படுத்தி, லத்தீன் – அமெரிக்க நாடுகளில் உள்ள தரை இலக்குகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுதான் தனது அடுத்தகட்ட திட்டம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவுக்கு பக்கத்தில் இவ்வளவு வலிமையான அமெரிக்க படைகள் குவிக்கப்படுவது அந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
















