டெல்லி விமான நிலையத்துக்குப் பெண் ஒருவர் உள்ளாடையில் மறைத்துத் தங்கக் கட்டிகளை எடுத்து வந்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு, மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்திறங்கிய பெண் பயணி ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில், வரி செலுத்த அவசியமில்லாத வழியில் நடந்து சென்றார்.
இதனால் அவரை மறித்த சுங்க அதிகாரிகள், தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரின் உள்ளாடையின் உள்ளே 6 தங்க கட்டிகளை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.
சுமார் 1 கிலோ கிராம் எடையுள்ள தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலங்களில் தங்கத்தின் விலையேற்றம் காரணமாக அதிகளவிலான கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதாகச் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
















