உத்தராகண்ட் மாநிலம், ஹல்த்வானியில் அதிவேகமாக இயக்கப்பட்ட கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஹல்த்வானியில் உள்ள டிபி நகர் சந்திப்புக்கு அருகில் அதிவேகமாக வந்த கார் ஒன்று வளைவில் திரும்பியுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அந்த வழியாக நடந்து சென்ற ஜீவன் பந்த் என்பவர் மீது மோதி ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஜீவன் பந்த் துடிதுடித்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடித் தலைமறைவானார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு தப்பியோடியவரை தேடி வருகின்றனர். இதனிடையே விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
















