குவாங்சோ சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியில் லுலு சன்னை வீழ்த்தி ஆன் லி சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை லுலு சன், அமெரிக்காவின் ஆன் லியை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் லுலு சன்னை வீழ்த்தி ஆன் லி சாம்பியன் பட்டம் வென்றார்.
















