அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த ஜூலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் இல்லாத வகையில், இம்மோதலில் பலர் கொல்லப்பட்டனர்.
3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டுத் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். இம்மோதலை முடிவுக்குக் கொண்டு வர மலேசியா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் மத்தியஸ்தம் செய்தனர்.
இதையடுத்து ஜூலை இறுதியில் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் பங்கேற்றனர்.
இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்றுள்ளார். அவர் முன்னிலையில் தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனால் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் நிலவிய மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
















