பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், நவம்பர் 15ம் தேதி வரையிலான பிரச்சார பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர், வரும் 28ம் தேதி கிழக்கு திண்டுக்கல் பகுதியிலும், 31ம் தேதி வடக்கு தஞ்சை பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நவம்பர் ஒன்றாம் தேதி திருச்சியின் கிராமப்புற பகுதிகளிலும், நவம்பர் 3ம் தேதி தெற்கு ஈரோடு பகுதிகளிலும், நவம்பர் 4ம் தேதி கிழக்கு நாமக்கல் பகுதிகளிலும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதே போல நவம்பர் 5 முதல் 8ம் தேதி வரை கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, சேலம் கிழக்கு பகுதிகள் மற்றும் தருமபுரியில் மக்களை சந்திக்க உள்ளார்.
நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11ம் தேதிகளில் திருப்பத்தூர் மற்றும் தெற்கு தஞ்சை பகுதிகளில் நயினார் நாகேந்திரன் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
நவம்பர் 12ம் தேதி புதுக்கோட்டையின் கிழக்கு பகுதிகளிலும், நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம், விருதுநகர் கிழக்கு பகுதிகளிலும் பொதுமக்களை சந்திக்கிறார்.
இதனையடுத்து தூத்துக்குடி செல்லும் நயினார் நாகேந்திரன் நவம்பர் 15ம் தேதி வடக்கு தூத்துக்குடியில் மக்களை சந்திக்க உள்ளார்.
















