கனமழை காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாகப் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சிதறால், துண்டத்தாறவிளை, திக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பாய்ந்தோடும் நீரின் அழகிய கழுகுப் பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளது.
















