பலுசிஸ்தான் குறித்து பேசியதற்காகச் சல்மான் கானை பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான பட்டியலின் கீழ் பாகிஸ்தான் சேர்த்துள்ளது.
பாகிஸ்தானின் 43 சதவீத நிலப்பரப்புடன் மிகப்பெரிய மாகாணமாகப் பலுசிஸ்தான் இருந்து வருகிறது. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததிலிருந்து, பலுசிஸ்தான் மக்கள் தங்களை கட்டாயப்படுத்தி பாகிஸ்தான் உடன் சேர்த்ததாகத் தொடர்ந்து குற்றச்சாட்டை முன் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து பலூசிஸ்தான் மாகாணம் விடுதலை பெற்று விட்டதாகவும் பலூச் அமைப்பினர் தெரிவித்தனர். பலூசிஸ்தான் விடுதலை அமைப்பை நசுக்க துடிக்கும் பாகிஸ்தான், தனி பலூசிஸ்தான் கோருபவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஜாய் ஃபோரம் 2025 நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய சல்மான்கான், பலூசிஸ்தானை மட்டும் தனிமைப்படுத்தி குறிப்பிட்டார். இது சர்ச்சையான நிலையில், சல்மான் கானை பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வலுத்துவரும் பலூசிஸ்தான் கோரிக்கை பாகிஸ்தானை கவலையடையச் செய்துள்ளது.
















