டெல்லியில் இன்று மாலை தேர்தல் ஆணையம் நடத்தும் செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து முடிந்தது.
தொடர்ந்து தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தகைய சூழலில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்குச் செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றனர்.
இந்தச் சந்திப்பில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
















