நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு மற்றும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூன் மாதமே குறுவை சாகுபடி தொடங்கியது முதலமைச்சருக்கு தெரியும் என்றும், நெல்மணிகளை கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
தானிய கிடங்குகளில் விவசாயிகள் வாடகை செலுத்தியும் நெற்பயிர்கள் மழையில் நனைந்ததற்கு தமிழக அரசே காரணம் எனக் குற்றம்சாட்டிய அவர், நெல் கொள்முதல் விவகாரத்தில் அமைச்சர்கள் மாற்றி மாற்றிப் பேச வருவதாகக் கூறினார்.
கரூர் துயர சம்பவத்திற்கும் தமிழக அரசே காரணம் எனத் தெரிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி எனக் குறிப்பிட்டார்.
















