ஐநாவில் சீர்திருத்தங்கள் செய்வதை சில நாடுகள் தடுப்பதாகவும், இத்தகைய முயற்சிகள் கண்டிக்கத்தக்கது எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஐநா சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், ஐநா கவுன்சிலின் பழைய கட்டமைப்பு விதிகள் காலாவதியாகவிட்டதாகவும் இதனால் உலகில் நிலவும் புதிய சவால்களை ஐநாவால் கையாள முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை, உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் எனக் கூறிய அவர், அதை வேண்டுமென்றே பலவீனப்படுத்த அனுமதிக்க கூடாது எனக் குறிப்பிட்டார்.
ஐநாவில் சீர்திருத்தங்கள் செய்வதை சில நாடுகள் தடுப்பதாகவும் இத்தகைய முயற்சிகள் கண்டிக்கத்தக்கது எனவும் பர்வதனேனி ஹரிஷ் கூறினார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஐநாவில் அவசர சீர்திருத்தம் கொண்டுவர உலக நாடுகளுக்கு அச்சபையின் பொதுச் செயலாளர் அந்தோணி குட்ரோஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
















