கர்நாடகாவில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
பிதர் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறி மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞரை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாகத் தாக்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த விஷ்ணுவை மீட்டு மருத்தவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், விஷ்ணு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















