பழனி சட்டமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெற பூத் கமிட்டி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டுமென அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் அறிவுறுத்தி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளின் மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுசெயலாளர் இராம சீனிவாசன் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், சட்டப்பேரவை தேர்தலில் பழனி தொகுதியில் பாஜக வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய பணிகள்குறித்து நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தார்.
















