மழை காரணமாக வாலாஜாபாத் – அவலூர் செல்லும் பாலாற்று தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய 3 ஆறுகளும் பழைய சீவரம் பகுதியில் சங்கமிக்கின்றன.
எனவே, வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லப் பாலாற்றில் மேல் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதன் வழியாக வாகனங்கள் சென்று வந்த நிலையில், பாலாற்றில் 12 ஆயிரம் கன அடி அளவுக்குத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், பாலாறு தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவளூர், தம்மனூர், கம்மராஜபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல 30 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
















