அடுத்த மாதம் 9ம் தேதி முதல் ஷாங்காய் – டெல்லி இடையேயான விமான போக்குவரத்து தொடங்கவுள்ளது.
மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்ஷோ நகருக்கு நேரடி விமானம் இயக்கப்பட்டு வந்தது.
ஆனால், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த விமான போக்குவரத்து 5 ஆண்டுகளாக மீண்டும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், அடுத்த மாதம் 9ம் தேதி முதல் ஷாங்காய் – டெல்லி இடையேயான விமான போக்குவரத்தை தொடங்குகிறது.
















