இந்தியாவின் CMS-03 தகவல் தொடர்புச் செயற்கைக்கோள், நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து, CMS-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாகவும், இதற்காக LVM3 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CMS-03 என்பது இந்திய கடற்பகுதியில் தடையற்ற சேவை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட MULTI BAND COMMUNICATION SATELLITE ஆகும்.
சுமார் 4,400 கிலோ எடையுள்ள இந்தச் செயற்கைக்கோள், இந்திய மண்ணிலிருந்து புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் ஏவப்படும் மிகப்பெரும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகக் கருதப்படுகிறது.
















