காலாட் படை தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
1947ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி பாகிஸ்தானுடன் போரிட்டு இந்திய ராணும் காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டது.
ராணுவ வீரர்களின் வீர தீரச் செயலைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 27ஆம் தேதி காலாட் படை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் ஆகியோரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
















