திமுகவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒதுக்கப்படுவதாகக் கனிமொழி முன்னிலையில் நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய குளச்சல் முன்னாள் நகர செயலாளர் ரஹீம், நீண்ட காலமாகக் கட்சியில் இருக்கும் தன்னை போன்றவர்கள் ஒதுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
இவரது இந்தக் கருத்தை ஆமோதிக்கும் வகையில் அங்குக் கூட்டியருந்தவர்கள் கைதட்டி வரவேற்பளித்தனர்.
இதனையடுத்து உடனடியாகச் செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். திமுகவில் கீழ்மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும், அது வெளியில் தெரியாமல் மாவட்ட தலைமை பார்த்துக் கொள்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















