டெல்லியில் காற்று மாசு காரணமாக மூச்சுவிட முடியாமல் வாகன ஓட்டி ஒருவர் சிரமப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் வெப்பநிலை குறைய தொடங்கி, காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், தூக்கமின்மை, மூச்சு விடுவதில் சிரமம் எனப் பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு காரணமாக மூச்சுவிட முடியாமல் வாகன ஓட்டி ஒருவர் சிரமப்பட்டார்.
இதனால் செய்வதறியாது தவித்த வாகன ஓட்டியின் மனைவி, அந்த வழியாக வந்தவர்களிடம் குடிக்க தண்ணீர் தருமாறு உதவி கோரினார்.
இதுகுறித்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், அரசின் நடவடிக்கை மட்டுமில்லாமல் காற்று மாசை குறைக்க தனி மனிதர்களும் முன்வர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழை பெய்ய வைக்கப் பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
















