சூரசம்ஹாரத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை பெசன்ட்நகரில் உள்ள அறுபடை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
சூரபத்மனை முருகப்பெருமான் அழித்த நாள் உலகம் முழுவதும் சூரசம்ஹாரமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தினத்தையொட்டி சென்னை பெசன்ட்நகரில் உள்ள அறுபடை முருகன் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக சகோதர, சகோதரிகளின் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்வாழ்வுக்காகவும், பாரதத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் ஆளுநர் வேண்டிக் கொண்டதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
















