5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது.
2020ஆம் ஆண்டு நடந்த எல்லை மோதலுக்குப் பிறகு , இந்தியா மற்றும் சீனா உறவுகள் பாதித்த நிலையில, 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
இது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் இயல்புநிலைக்கு திரும்புவதை உறுதிப்படுத்தியுள்ளது.
கொல்கத்தா விமானநிலையத்தில் இருந்து சீனாவின் குவாங்சௌவிற்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானம் உற்சாகமாக வழியனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்டமாகக் கொல்கத்தா–குவாங்சௌ விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் முதல், டெல்லியில் இருந்து ஷாங்காய் மற்றும் குவாங்சௌ நோக்கி நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
இதன் மூலம் சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகள் மீண்டும் உயிர்பெறும் என இரு தரப்பும் நம்புகின்றன.
















