99% வாக்குறுதிகளை நிறைவேற்றிய பொற்கால திமுக ஆட்சி இது என்று முழங்குவது வெட்கக்கேடானது எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
17 ரூ. 2000 கோடி செலவில் 200 தடுப்பணைகள் கட்டப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 90-இல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? மருதையாற்றில் திருமானூர், தா.பழூர், கொள்ளிடம் குருவாடி, புளியங்கோம்பை அருகில் காட்டாறு, குண்டேரி, புஞ்சைபுகலூர், நன்னியூர், குளித்தலை ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என்று கொடுத்த வாக்குறுதியைக் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடப்பில் போட்டதால் இன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வறட்சியில் தவித்து வருகின்றன.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி ஏமாந்து, தற்போது தாகத்திற்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் கிட்டாமல் மக்கள் தள்ளாடும் வேளையில், 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிய பொற்கால ஆட்சி இது என்று முழங்குவது வெட்கக்கேடானது.
கொடுத்த வாக்குறுதியை வீசியெறிந்து, தாகத்தில் தவிக்க விட்ட இந்த திமுக
அரசு தமிழகத்தில் இருந்து தூக்கியெறியப்படும் நாள் வெகுதூரமில்லை என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















