தெருநாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமை செயலாளர்கள் நவம்பர் 3 ஆம் தேதி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெருநாய்க்கடி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்கள் தொடர் நிகழ்வாக மாறிப் போய்விட்டதாக வேதனை தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் 2 மாத காலம் அவகாசம் வழங்கியும் மேற்கு வங்கம், தெலங்கானா, டெல்லி தவிர மற்ற மாநிலங்கள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லையென நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
தொடர்ந்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமை செயலாளர்கள் நவம்பர் 3 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















