இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம் 2ஆம் கட்டமாக தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
சிறப்பு திருத்தத்தின் மூலம் ஜனநாயக முறையில் அனைவரும் வாக்களிக்க முடியும் என்றும்,
தகுதியுள்ளவர்களுக்கு ஓட்டுரிமையை உறுதி செய்யவும், போலியான வாக்காளர்களை முற்றிலுமாக நீக்கவும் இது வழிவகை செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் நேர்மையாக வாக்களிப்பவர்களுக்கு நம்பிக்கையையும், புதிதாக சேரும் வாக்காளர்களுக்கு ஊக்கத்ததையும் அளித்துள்ளது என வாசன் தெரிவித்துள்ளார்.
















