திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழாவின் 7 ஆம் நாளில் திரளான பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கந்த சஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தின்போது ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில் விழாவின் 7 ஆம் நாள் நிகழ்வான திருக்கல்யாண வைபவத்திற்காக கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் வெற்றிலையில் நெய் விளக்கேற்றி மனமுருகி வழிபாடு செய்தனர்.
















