கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய உணவு பொருள் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் ப்ரீத்தி தலைமையில் பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
அப்போது கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்து மாதிரிகளை சேகரித்தனர்.
















