வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டும், தென்மேற்கு பருவமழை காலத்திலும் போதிய மழை பொழிவு இல்லாததால் வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து கடை அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட சூழலில், தற்போது வடகிழக்கு பருவமழையால் வைகை அணை நிரம்பி போதிய நீர் இருப்பு உள்ளதால் தண்ணீரை திறக்க மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
















