பிபிசி தமிழ் வலைதளத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கட்டுரை வெளியிடப்பட்டதாக கூறி தமிழக பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி பிபிசி தமிழ் வலைதளத்தில், மற்ற நாடுகளில் அரசையே மாற்றி அமைக்கும் GenZ இளைஞர்கள், ஏன் இந்தியாவில் வீதிகளில் இறங்கி போராடவில்லை என்ற தலைப்பிலான கட்டுரையை வெளியிட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் குமரகுரு, அமைதியான சூழல் நிலவும் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பிபிசி நிறுவனம் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
















