மேக விதைப்பு செயல்முறை பணி நிறைவு பெற்றுள்ளதால், டெல்லியில் செயற்கை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காற்று மாசுபாட்டை சமாளிக்க டெல்லியில் மேக விதைப்பு செயல்முறை பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் இருந்து புறப்பட்டது.
டில்லி அரசு முன்னெடுத்த மேக விதைப்பு முயற்சி கான்பூர் ஐஐடியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
















