மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மேம்படுத்துவதற்கான 8வது ஊதியக் குழுவுக்கு மூன்று உறுப்பினர்களை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கஜ் ஜெயின், ஐ.ஐ.எம். பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 18 மாதங்களுக்குள் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது.
















