விக்கிபீடியாவுக்கு போட்டியாக, பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் குரோக்கிபீடியா என்ற புதிய தகவல் களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
விக்கிபீடியாவில் தகவல்களை யார் வேண்டுமானாலும் பதிவிட முடியும் என்பதால், சில தரவுகள் சார்புடையதாக இருக்கலாம் என விமர்சித்த எலான் மஸ்க், இதற்கு மாற்றாக சார்பில்லாத, நம்பகமான தரவுகளை வழங்குவதற்காக குரோக்கிபீடியாவை தொடங்கியுள்ளார்.
குரோக்கிபீடியாவில் இடம்பெறும் அனைத்துப் பதிவுகளும், முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் சரிபார்க்கப்பட்ட தரவுகளாக மட்டுமே இருக்கும் என்றும், இது விக்கிபீடியாவை விட சிறப்பாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
















