பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் நடந்த ஆதீனம் சாந்தலிங்க அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், சம்ஸ்கிருதத்தை எதிர்த்து பேசுவதால் தமிழ் மொழி வளராது என தெரிவித்தார்.
நடுநிலையோடு செயல்பட்டு ஆன்மிக பாதையில் செல்ல வேண்டும் என ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பேரூர் ஆதீனத்தின் சமுதாயம் மற்றும் தமிழ் தொண்டு பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை அவர் தெரிவித்தார்.
















