இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று காசாவில் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாகக் கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2023-ல் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசாவில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















