ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்குச் சென்ற குடியரசுதலைவர் திரவுபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.
குடியரசுதலைவர் திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படைதளத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு விமானப்படை வீரர்கள் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.
இதன்மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய பெண் குடியரசுத் தலைவர் என்பெருமையைப் பெற்றார். இந்த ரஃபேல் போர் விமானம் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பாகும். பிரான்ஸ் நாட்டின் தசால்ட் அவியேஷன் என்ற நிறுவனம் தான் இந்த போர் விமானங்களை தயாரித்து வருகிறது.
இந்த போர் விமானங்கள் தலைமுறையை சேர்ந்தவையாகும். கடந்த 2020ம் ஆண்டில் முதல் முதலாக இந்த போர் விமானம் நம் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.
முதல் முறையாக 5 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. அதன்பிறகு ‛கோல்டன் ஏரோஸ்’ என அழைக்கப்படும் 17 Squadron-ல் இந்த விமானங்கள் இணைக்கப்பட்டது.
தற்போது கூடுதல் ரபேல் போர் விமானங்கள் நம்மிடம் உள்ளது. இந்த போர் விமானங்கள் தற்போது நம் நாட்டுக்கு பெரிய அளவில் கைக்கொடுத்து வருகிறது.
















