தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள வேளச்சேரி பிரதான சாலை குண்டும் குழியுமாக மோசமாக உள்ள நிலையில் உள்ளதாகவும், மழை நீர் தேங்கி பள்ளங்கள் தெரியாததால் சிரமத்திற்கு ஆளாகுவதாகவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாவதாகவும் கூறியுள்ளனர். சாலையைச் சீரமைக்க கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் வெறும் மண்ணை கொட்டி பள்ளங்களை நிரப்பியதாகவும், மழை பெய்தவுடன் மண் அடித்துச் சென்று மீண்டும் பழைய நிலைக்குச் சாலை உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், சேதமடைந்த சாலையை முறையாகச் சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















