பாகிஸ்தானின் தாக்குதலால் தங்களிடம் எதுவும் மிச்சமில்லை என ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
எல்லைப் பகுதியில் வன்முறை ஏற்படுவது புதிதல்ல. 2021 ஆகஸ்டில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் பெரும்பாலும் தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் தொடர்புடைய செயல்பாடுகள் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே மோசமடைந்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், தாங்கள் பாகிஸ்தானிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகவும், குளிர்காலம் நெருங்கும் சூழலில் சாமன் எல்லையில் சிக்கி தவிப்பதாகவும் ஆப்கானிஸ்தான் அகதிகள் கூறுகின்றனர்.
















