மத்திய அரசின் கொள்கை முடிவுகளை முடக்கும் வகையிலான எதிர்ப்புகளை ஏற்க முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனை எதிர்த்து, அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, நாட்டின் பாதுகாப்புக்காக மத்திய அரசு, முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளதால் அதனை முடக்கும் வகையிலான எதிர்ப்புகளை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அரசு அவசர முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறிய நீதிபதி, வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
















