கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பட்டப்பகலில் வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்திய வம்சாவளி தொழிலதிபரான தர்ஷன் சிங் சாஹ்சி என்பவர், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே காரில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர் சாஹ்சி மீது துப்பாக்கி நடத்திவிட்டு தப்பிச் சென்றார். இதில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை சாஹ்சி நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
















