கென்யாவில் புகைப்படக் கலைஞர் காம்பிஸ் பௌர்கனாட் எடுத்த, சுருள் மேனியுடன் கூடிய சிங்கத்தின் அரிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிங்கத்திற்கு அழகே அதன் பிடரி முடி தான். அந்த வகையில் கென்யாவின் மசாய் மாரா வனப்பகுதியில் சுருள் மேனியுடன் சிங்கம் ஒன்று காணப்பட்டுள்ளது.
இதனைப் புகைப்படக் கலைஞர் காம்பிஸ் பௌர்கனாட் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார். தொடர்ந்து அந்தக் காட்சியைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிப் பலரையும் கவர்ந்தது. மேலும் இதற்குப் பலரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டனர்.
பரந்து விரிந்த வனப்பகுதியில் ஒரு அழகிய இளைஞனை காம்பிஸ் பௌர்கனாட் கண்டுபிடித்துள்ளதாகவும் இணைய வாசிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் சிலரோ ஒரு திரைப்பட நட்சத்திரம் நமக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
















