காபூலின் கண்களைப் பிடுங்குவோம் என்று ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தானுக்கும் ஆப்கான் தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பாகிஸ்தானின் சில கோரிக்கைகளை ஆப்கான் பிரதிநிதிகள் கடுமையாக எதிர்த்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர். இஸ்தான்புல்லில் ஆப்கான் தாலிபான்களுடனான நான்கு நாள் பேச்சுவார்த்தை எந்த வெற்றியும் இல்லாமல் முடிவடைந்ததாகப் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தான் இஸ்லாமாபாத்தை பார்த்தால் கூட, நாங்கள் அவர்களின் கண்களை பிடுங்கி விடுவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















