மகாராஷ்டிரா மாநிலம், தானேயில் விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டிய போலீசாரை, இளைஞர் துரத்திப் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தானேயின் அம்பிகா நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் போலீசார் போக்குவரத்து விதிமுறைகளுக்கு எதிரான நம்பர் பிளேட்டுடன் கூடிய இருசக்கர வாகனமொன்றில் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனைக் கவனித்த அந்த இளைஞர், தவறான நம்பர் பிளேட்டுடன் வாகனம் இயக்குவது குறித்து போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், விதிகளை மீறிய போக்குவரத்து போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வலுத்து வருகிறது.
















