பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா தர்பங்காவில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், RJD மற்றும் காங்கிரசின் வாரிசு அரசியல் நிலைப்பாட்டைத் தோலுரித்துக் காட்டினார்.
குறிப்பாக, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவை முதல்வராக்குவதிலும், சோனியா காந்தி ராகுலை பிரதமராக்குவதிலுமே கவனம் செலுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால் பாஜகவில் எந்த அரசியல் பின்னணியும் இல்லாத 25 வயதுடைய மைதிலி தாகூருக்கு வாய்ப்பளித்துள்ளதாகக் கூறிய அமித்ஷா, RJD அல்லது காங்கிரசில் இது போன்று நடக்க வாய்ப்புள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மற்றும் பீகார் முதல்வர் பதவிகள் காலியாக இல்லை என்றும், மத்தியில் நரேந்திர மோடியும், பீகாரில் நிதிஷ் குமாரும் உள்ளனர் என்றும் எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்தார்.
மேலும் இரு கட்சிகளின் ஊழல் புகார்களை எடுத்துரைத்த அவர், பயங்கரவாத தாக்குதலில் முந்தைய காங்கிரஸ் மற்றும் தற்போதைய பாஜக அரசின் நிலைப்பாடு குறித்தும் விவரித்தார்.
தொடர்ந்து, தர்பாங்காவுக்கு மெட்ரோ ரயில் நிலையம், மிதிலையில் சீதா தேவிக்கு கோயில் கட்டுமானம் போன்ற வாக்குறுதிகளையும் பீகார் மக்களுக்கு அமித்ஷா வழங்கியுள்ளார்.
















