தென்காசியில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஆட்களை அழைத்து வர அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தியதால், மாணவ மாணவிகளும், பணிக்குச் செல்வோரும் பேருந்து கிடைக்காமல் அவதியடைந்தனர்.
பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின், தென்காசி மாவட்டம் அனந்தபுரத்திற்கு வருகை தந்தார்.
முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால், வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்களை அழைத்து வர அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதனால், 400க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வரிசை கட்டி நின்றன.
இதன் காரணமாக மாணவ மாணவிகள் உள்பட அனைவரும் பேருந்து கிடைக்காமல் அவதியடைந்தனர்.
















