பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!
Mar 15, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் வெளிப்படையாக ஜனநாயக ஆட்சி நீடித்தாலும், அதன் பின்னணியில் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர் தனது முழு அதிகாரத்தையும் ஒருங்கிணைத்து வருகிறார். அதிகாரிகள் கைப்பாவைகளாக மாறியுள்ள நிலையில், முனீர் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் அரசு நிர்வாகத்தையும், உளவுத்துறையையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சற்று விரிவாகக் காணலாம் இந்த செய்தி தொகுப்பில்.

பாகிஸ்தானில் அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்க, ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் திட்டமிட்டு வருவதாகக் கடந்த ஜூலை மாதம் செய்திகள் பரவின. ஆனால் சர்வதேச அளவில் அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அவர் அந்த முடிவில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன் நவாஸ் ஷெரீஃபை பதவியில் இருந்து நீக்கி பர்வேஸ் முஷாரஃப் ஆட்சியைக் கைப்பற்றியபோது ஏற்பட்ட சர்வதேச எதிர்ப்புகளை முனீர் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால்தான் தற்போது ஜனநாயகத்தை முன்னிறுத்தி நாட்டை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் தந்திரத்தை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

முதற்கட்டமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பதவியில் இருந்து அகற்றிய முனீர், அவரை சிறையில் அடைத்துத் தனது திட்டத்திற்கு தொடக்கப்புள்ளி வைத்தார். இதன் மூலம் தனக்கு எதிராக இருந்த மிகப்பெரிய அரசியல் எதிரியை முடக்கிய முனீர், அவருக்குச் சாதகமாகச் செயல்படும் அசிஃப் அலி சர்தாரியை அதிபராகவும், ஷெபாஸ் ஷெரீஃப்பை பிரதமராகவும் நியமித்தார்.

இவர்கள் இருவரும் தற்போது முனீரின் கைகளில் கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருவதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்களே புலம்பத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து தனக்கு நம்பிக்கையானவர்களில் ஒருவரான ஜெனரல் அசிம் மாலிக்கை, பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராகவும், ஐஎஸ்ஐ தலைவராகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்தார் முனீர். அடுத்தபடியாக முனீர் தனது மருமகனான கேப்டன் சையத் அபு ரஹ்மான் பின் காஸிம் உட்பட 10 ராணுவ அதிகாரிகளைச் சிவில் நிர்வாகத்திற்கு மாற்றினார்.

இவர்கள் மூலம்தான் அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு துறையிலும் தனது கட்டுப்பாட்டை வேரூன்றச் செய்ய முயன்று வருகிறார் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர். குறிப்பாக மருமகன் சையத் அபு ரஹ்மான் பின் காஸிமை பிரதமர் அலுவலக பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துள்ளதன் மூலம், ஷெபாஸ் ஷெரீஃபின் அனைத்து நடவடிக்கைகளையும் நெருக்கமாகக் கண்காணிக்க முயலும் முனீரின் தந்திரத்தை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும்.

இதேபோல உள்துறை அமைச்சகம், தூதரகங்கள் மற்றும் உயர் ஆணையங்களிலும் தனக்கு நம்பிக்கையானவர்களையே பணியமர்த்த முனீர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசிம் முனீரின் மருமகன் வருங்காலத்தில் அமெரிக்கா அல்லது இந்தியாவின் தூதராக நியமிக்கப்படலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் அவர் வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளிலும் முழு கட்டுப்பாட்டைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அவரது ஆட்சியை அவமதிக்கும் தஹ்ரீக்-இ-தாலிபான், பலூச் தேசியவாதப் படைகள் மற்றும் ஆப்கான் தலிபான் போன்ற உள்ளூர் பயங்கரவாத அமைப்புகள் முனீரின் லட்சியத்திற்கு மிகப்பெரும் சவாலாக இருந்து வருகின்றன.

சில பாகிஸ்தான் ராணுவத்தினரும் அண்மையில் முனீரின் உத்தரவுகளை மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகக் கைபர் பகுதியில் உள்ள ராணுவப்படைகள் தலிபானுக்கு எதிராகப் போரிட மறுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகத் தனது பதவி காலத்தை 2030 வரை நீட்டிக்க முனீர் வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது.

ஆனால் 2027 வரை மட்டுமே பதவி காலத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதால், பாகிஸ்தான் ராணுவத்தினுள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: pakistanAsim MunirAttempt to indirectly rule the Pakistani government: Munir's intrigue gradually coming to lightnews pakitan
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

Next Post

தவெகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து என்டிஏ கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் – அமித் ஷா

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies