இன்று பசும்பொன் செல்லும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
அப்போது அவருக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற அவர் மனமுருகி வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்த அவர், ஹெலிகாப்டர் மூலம் இன்று பசும்பொன் செல்கிறார். அங்கு முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை விழாவை ஒட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். இதனையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
















