ஆகாஷ்வாணி நடத்திய வருடாந்திர சர்தார் வல்லபாய் படேல் நினைவு சொற்பொழிவில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய எல்-முருகன் நமது மகத்தான தேசத்தை ஒன்றிணைப்பதில் இந்தியாவின் இரும்பு மனிதர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.
அவரது 150வது பிறந்தநாளையும் தேசிய ஒற்றுமை தினத்தையும் நாம் நினைவுகூரும் வேளையில், தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் #ஏக்பாரத்ஸ்ரேஷ்ட பாரத்தின் உணர்வை வளர்ப்பது என்ற அவரது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் எல்.முருகன் கேட்டுக்கொண்டார்.
















