மற்ற நாடுகளுக்குச் சமமாக அணு ஆயுத சோதனைகளை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்புக்கு முன்பு அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உத்தரவில், மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன என்றும், முதல்முறையாக அதிபராகப் பொறுப்பேற்றபோது அழிவுக்குக் காரணமான அணு ஆயுதங்களைச் சோதனை செய்ய மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
அணு ஆயுத சோதனையில் ரஷ்யா 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும் உள்ளதாகக் கூறியுள்ள டிரம்ப், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவும் அணு ஆயுத சோதனையில் சமமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகள் அணு ஆயுத திட்டங்களை சோதித்து வருவதால், அமெரிக்காவும் அணு ஆயுத சோதனையை உடனடியாகத் தொடங்குமாறு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
















