தேனி மாவட்டம் போடி அருகே மது போதையில் நண்பரின் மனைவியை அவதூறாகப் பேசியதாக இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொட்டாக்குடியைச் சேர்ந்த சுரேஷ், மாசிலாமணி, கருப்பசாமி உட்பட 4 பேர் குரங்கணி முட்டம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில், இரவு வீடு திரும்பும்போது 4 பேரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, சுரேஷின் மனைவிகுறித்து அவதூறாகப் பேசிய கருப்பசாமியை 3 பேரும் சேர்ந்து தாக்கி அங்கேயே விட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
அதிகாலையே, அந்த வழியாக வந்த விவசாயிகள் சாலையில் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
 
			 
                    















